LATEST NEWS
அறிவாலயத்துக்கு வெள்ளையடிச்சு வாடகைக்கு விடப்படும்… எம்ஜிஆர், ஜெ. நினைத்ததை விஜய் முடிச்சிட்டாரு… அமைச்சர் நிர்மல்குமாரின் பரபரப்பு பேச்சால் கடுப்பில் திமுக..!!
முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் திமுகவை ஒழிப்பதற்காகவே அதிமுகவைத் தொடங்கினர் என்றும், ஆனால் தற்போது முதலமைச்சர் விஜய் திமுகவை ஒழித்துவிட்டதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் இந்த அதிரடி கருத்தை முன்வைத்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுகவின் தலைமை அலுவலகமான அறிவாலயத்தை இனிமேல் வெள்ளையடித்து வேறு யாருக்காவது வாடகைக்குத்தான் விட வேண்டும் என்று கடுமையாக விமர்சித்தார். மேலும், வரும் 5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சியில் தவெக அரசு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என்றும் பொதுக்கூட்ட மேடையில் அவர் உறுதிபடக் கூறினார்.
எதிர்க்கட்சியினருக்கு ஊழல் குறித்தோ அல்லது அவர்களின் கட்சி நிதி குறித்தோ பேசினாலே பயமும் கோபமும் வந்துவிடுகிறது என்று அமைச்சர் நிர்மல்குமார் சாடினார். தமிழக அரசியலில் தவெக ஆட்சி அமைத்துள்ள சூழலில், திமுக மற்றும் எதிர்க்கட்சிகளை விமர்சித்து மதுரைக் கூட்டத்தில் அவர் பேசிய இந்த பேச்சு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
