அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை.. இணையத்தில் வைரலாகும் சர்ச்சை வீடியோ… மறுப்பு தெரிவித்து முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் கீர்த்தனா…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை.. இணையத்தில் வைரலாகும் சர்ச்சை வீடியோ… மறுப்பு தெரிவித்து முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் கீர்த்தனா…!!

Published

on

சமூக வலைதளங்களில் பரவி வரும் சர்ச்சைக்குரிய வீடியோவில் இருப்பது தான் இல்லை என்று அமைச்சர் கீர்த்தனா திட்டவட்டமாக விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பொதுவெளியில் இன்னும் ஒரு பெண்ணின் உடையும், அவளது தோற்றமும் விவாதப் பொருளாக்கப்பட்டு விசாரணைக்குள்ளாவது ஏன் என்று வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போதைய ஆட்சியின் மீது எவ்வித குறையும் சொல்ல முடியாத காரணத்தால், அரசியல் எதிரிகள் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து திட்டமிட்டு வதந்திகளைப் பரப்பி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில், கருப்பு நிற ஆடையில் பெண் ஒருவர் காரில் இருந்து இறங்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அமைச்சர் இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in