LATEST NEWS
“ஐயோ பாவம்… ஆசையா ரசகுல்லா சாப்பிட்ட 8 வயது சிறுவன்… அடுத்த 10 நிமிடத்தில் நடந்த கொடூரம்…” கதறித் துடிக்கும் பெற்றோர்..!!
பீகார் மாநிலம் போத்கயா அருகே உள்ள சோனு பிகஹா கிராமத்தில், தொண்டையில் ரசகுல்லா சிக்கியதால் 8 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இறந்த சிறுவன் அதே கிராமத்தைச் சேர்ந்த பச்சூ யாதவ் என்பவரின் மகன் சிவம் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளான். ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் ரசகுல்லா வைக்கப் பட்டிருந்த நிலையில், அதை சாப்பிடுவதற்காக சிறுவன் பிடிவாதம் பிடித்துள்ளான். பெற்றோர் தடுத்தையும் மீறி, அந்த சிறுவன் ரசகுல்லாவை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு சாப்பிட்டுள்ளான்.
ரசகுல்லாவை சாப்பிட்டவாறே வீட்டின் உள்ளே ஓடிய சிறுவன், எதிர்பாராதவிதமாகத் தடுமாறி கீழே விழுந்துள்ளான். அப்போது அவன் வாயிலிருந்த ரசகுல்லா அவனது தொண்டையில் பலமாகச் சிக்கிக்கொண்டது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறுவன் கடுமையாகப் அவதியுறவே, பதறிய பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அவனை உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள போத்கயா சமூக சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
சிறுவனின் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக மகத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். ஆனால், மருத்துவமனையை அடையும் வழியிலேயே சிறுவன் சிவம் குமார் பரிதாபமாக உயிரிழந்தான். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதும், மருத்துவர்கள் அவன் இறந்துவிட்டதாக அறிவித்தனர். சிவமின் மரணச் செய்தியைக் கேட்டதும், குடும்பம் முழுவதும் நிலைகுலைந்து போனது. குழந்தையின் தாயும் தந்தையும், அவர்களது உறவினர்கள் அனைவருடனும் தேற்றமுடியாமல் தவிக்கின்றனர். இந்தத் துயரச் சம்பவம் சோனு பிகா கிராமம் முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்தத் துயரச் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
