தப்பியோடிய உதயநிதியின் நண்பர் ரத்தீஷ்…. லண்டனில் ஸ்கெட்ச் போட்டு தூக்கப்போகும் முதல்வர் விஜய் …  உதயநிதிக்கு காத்திருக்கும் தீபாவளி பரிசு…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தப்பியோடிய உதயநிதியின் நண்பர் ரத்தீஷ்…. லண்டனில் ஸ்கெட்ச் போட்டு தூக்கப்போகும் முதல்வர் விஜய் …  உதயநிதிக்கு காத்திருக்கும் தீபாவளி பரிசு…!!

Published

on

தமிழக முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அதிகாரப்பூர்வமாக லண்டன் சென்றுள்ள நிலையில், அந்தப் பயணத்திற்குப் பின்னால் ஒரு பெரிய அரசியல் மற்றும் சட்டரீதியான பின்னணி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக் துறையில் நடந்ததாகக் கூறப்படும் சுமார் ₹1000 கோடிக்கும் அதிகமான மெகா ஊழல் விவகாரம், தற்போது மீண்டும் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

இந்த டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் முதன்மைப் புள்ளியாகவும், உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பராகவும் செயல்பட்ட ரத்தீஷ் என்பவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கடந்த திமுக ஆட்சியிலேயே அவர் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்று தலைமறைவானார். அமலாக்கத் துறை விசாரணை வளையத்தில் ரத்தீஷ் சிக்கினால், அவர் அளிக்கும் வாக்குமூலம் மூலம் திமுகவின் முக்கியக் தலைவர்கள் மற்றும் முதல் குடும்பத்திற்குச் சட்டரீதியான நெருக்கடிகள் தீவிரமடையும் எனக் கருதப்படுகிறது.

Advertisement

சமீபத்தில் சட்டசபையில் பேசிய முதல்வர் விஜய், டாஸ்மாக் முறைகேடுகள் அனைத்துக்கும் பின்னணியில் ரத்தீஷ் செயல்பட்டதாக அமலாக்கத் துறை குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டினார். மேலும், ‘பார்ட்டி ஃபண்ட்’ என்ற பெயரில் வசூலிக்கப்பட்ட பெருந்தொகை தொடர்பான அமலாக்கத் துறை அறிக்கையில் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

தலைமறைவாக உள்ள ரத்தீஷை இந்தியாவிற்கு அழைத்து வந்தால் இந்த வழக்கின் முழு உண்மையையும் வெளிக்கொண்டுவர முடியும் எனத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரைச் சந்தித்த முதல்வர் விஜய், வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் ரத்தீஷைக் கைது செய்ய மத்திய அரசின் ஆதரவையும், ‘லுக் அவுட்’ நோட்டீஸ் மற்றும் இன்டர்போல் (Interpol) உதவியையும் கோரியுள்ளார்.

Advertisement

லண்டன் பயணத்திற்கு முன்பாக மத்திய அரசின் உயர் அதிகாரிகளைச் சந்தித்த விஜய், ரத்தீஷை சர்வதேசக் காவல்துறையான இன்டர்போல் மூலம் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இன்டர்போல் அதிகாரப்பூர்வ தொடர்புகள் மற்றும் சர்வதேச சட்ட நடவடிக்கைகளுக்கும் விஜய்யின் லண்டன் பயணத்திற்கும் தொடர்பிருக்கலாம் எனத் தகவல்கள் கூறுகின்றன. வரும் தீபாவளிக்குள் ரத்தீஷைக் கைது செய்து தமிழகம் கொண்டுவருவதே விஜய்யின் முக்கிய இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in