“திமுக பாஜகவுடன் உறவில் இருந்தது..!” திருச்சியில் திருமாவளவன் கொடுத்த அதிரடி வாக்குமூலம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“திமுக பாஜகவுடன் உறவில் இருந்தது..!” திருச்சியில் திருமாவளவன் கொடுத்த அதிரடி வாக்குமூலம்..!!

Published

on

இந்தியாவின் பல மாநிலங்களில், குறிப்பாக இடைத்தேர்தல்களில் பணத்தைக் கொட்டி இறைக்கிறார்கள் என்றும் வாக்குகளை விலை கொடுத்து வாங்குவது அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “இந்தியாவின் பல மாநிலங்களில் குறிப்பாக இடைத்தேர்தல்களில் பணத்தை கொட்டி இறைக்கிறார்கள்.. வாக்குகளை விலை கொடுத்து வாங்குவதும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் அப்படி நடக்கக்கூடாது. குறுகிய காரணத்திற்காக அமைந்த கூட்டணி அல்ல திமுக, விசிக கூட்டணி. இது அண்ணன் ஸ்டாலின் உட்பட திமுகவின் அனைத்து முன்னணி நிர்வாகிகளுக்கும் தெரியும். ஆனால் ஒரு சிலர் பதவிக்காக நாங்கள் சென்றுவிட்டோம் எனக் கூறி துரோகி பட்டம் சுமத்துகின்றனர். பதவி ஆசை பிடித்து ஓடிவிட்டதாக தவறான தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். இது என் தலைமை மீது தொடுக்கப்படும் தாக்குதல். திமுக முன்னணி தலைவர்களோடு தொடர்ந்து பயணித்து வருகிறோம். அண்ணன் ஸ்டாலின் குணமடைந்ததும் அவரை நேரில் சந்திப்பேன். தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னை இருப்பது உண்மைதான். இதுபற்றி அமைச்சர்களுக்கு அதிகாரிகள் சரியான தகவலை வழங்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement

மேலும் பேசிய அவர், “திமுக கூட்டணியில் இருந்த காலத்தில் நாங்கள் பாஜகவை எதிர்த்த அளவிற்கு, திமுக வெளிப்படையாக எதிர்த்ததா என்றால் இல்லை; அவர்கள் ஒன்றிய அரசோடு உறவில் இருந்தார்கள்; அவர்களை நிகழ்ச்சிகளுக்கு அழைத்தார்கள், அமைச்சர்களும் வந்திருக்கிறார்கள்; அப்போதும் திமுக பாஜக எதிர்ப்பில் உறுதியாக இருக்கிறது என்று நம்பினோம். அதேபோல்தான் இன்றும் த.வெ.கவும் பாஜக எதிர்ப்பில் உறுதியாக இருப்பதாக நம்புகிறோம்” என்றார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in