LATEST NEWS
ஐயோ கடவுளே.. ஆக்சிஜன் இல்லாமல் வழியிலேயே துடித்த வாலிபர்.. இறுதியில் நேர்ந்த அதிர்ச்சி.. சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் 58 வினாடி வீடியோ..!!
மத்தியப் பிரதேச மாநிலம் மாண்ட்லா மாவட்டம், சுன்ஹரா மால் கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான அஜித் பரையா என்ற இளைஞர், சுகாதாரத் துறையின் அலட்சியத்தால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்ட அஜித்திற்குத் தேவையான நேரத்தில் டயாலிசிஸ் சிகிச்சை வழங்கப்படவில்லை என்றும், அவசர உதவிக்கு அழைக்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் ஒரு மணி நேரம் தாமதமாக வந்ததாகவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், ஆம்புலன்ஸில் வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டரில் சிறிது தூரம் செல்வதற்குள்ளேயே வாயு தீர்ந்துபோனதால், இளைஞர் மூச்சுத்திணறி மாண்ட்லா மருத்துவமனையை அடையும் முன்பே வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
https://www.instagram.com/reel/DbaoHgRT1zu/?utm_source=ig_web_button_share_sheet
இந்தச் சம்பவம் தொடர்பாகச் சமூக ஊடகங்களில் பரவி வரும் 58 வினாடிகள் கொண்ட காணொளி, 108 ஆம்புலன்ஸ் சேவையின் அவல நிலையைத் தோலுரித்துக் காட்டியுள்ளது. அதில், காலி ஆக்சிஜன் சிலிண்டருடன் இளைஞர் மூச்சுத்திணறலுக்கு ஆளாவதும், பெற்றோர் செய்வதறியாது கதறுவதும் பதிவாகியுள்ளது. இது குறித்து விளக்கமளித்த மாவட்ட சுகாதார அதிகாரி டி.ஜே. மொகந்தி, 108 ஆம்புலன்ஸ் சேவை போபாலில் உள்ள மாநில அளவிலான அமைப்பால் நிர்வகிக்கப்படுவதாகவும், ஆம்புலன்ஸ்களில் ஆக்சிஜன் இல்லாமை மற்றும் தாமதம் குறித்து ஏற்கனவே அரசுக்கு பலமுறை புகார்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவசரகால மருத்துவ அமைப்பின் இந்த அலட்சியப் போக்கு அப்பகுதியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
