LATEST NEWS
நேபாளத்தில் கரைபுரண்டு ஓடும் மரண வெள்ளம்..!100 அடி ஆழ நீர்மின் நிலைய சுரங்கத்திற்குள் சிக்கிய 450 ஊழியர்கள்… ஹெலிகாப்டர் மூலம் களமிறங்கி நேபாள ராணுவம் செய்த த்ரில்லிங் மீட்பு ஆபரேஷன்..!!
திபெத்- நேபாளம் எல்லையில் திடீரென ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் நேபாள எல்லைக்குட்பட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள நீர்நிலைகளில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. இந்த திடீர் வெள்ளத்தால் அப்பகுதியில் உள்ள பல்வேறு இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே கடுமையாக பாதிக்கப்பட்ட ரசுவா மாவட்டத்தில் நீர்மின் நிலைய சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தில் 450-க்கும் மேற்பட்டோர் பணியாற்றியதாக தெரியவந்தது. இந்த சுரங்கமும் வெள்ளத்தால் கடுமையாக பாதித்தது. இந்த பகுதியை ராணுவம் இன்று வான் வழியாக சென்றடைந்தது. பின்னர், சுரங்கத்திற்குள் நுழைந்து அங்கு தவித்துக் கொண்டிருந்த ஊழியர்களை பாதுகாப்பாக மீட்டனர். இதில் 63 இந்தியர்கள் உள்பட 350 பேரை நேபாள ராணுவம் மீட்டுள்ளது. இன்னும் சுமார் 100 பேர் சுரங்கத்தில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தியாவைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் இந்த வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 101 பேர் அடங்குவர். இவர்களில் 21 பேர் இன்று டெல்லி அழைத்து வரப்பட்டனர். அவர்கள் இன்று இரவு சென்னை திரும்புகிறார்கள்.
