“காப்பாத்துங்க சார்… மூச்சு முட்டுது…” இடிபாடுகளுக்கு அடியில் இருந்து போன் மூலம் உதவி கேட்ட மாணவர்… டெல்லியில் இடிந்து விழுந்த 20 ஆண்டு பழமையான PG விடுதி..! பதறவைக்கும் 11 வினாடி வீடியோ…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“காப்பாத்துங்க சார்… மூச்சு முட்டுது…” இடிபாடுகளுக்கு அடியில் இருந்து போன் மூலம் உதவி கேட்ட மாணவர்… டெல்லியில் இடிந்து விழுந்த 20 ஆண்டு பழமையான PG விடுதி..! பதறவைக்கும் 11 வினாடி வீடியோ…!!

Published

on

டெல்லியின் சத்யா நிகேதன் பகுதியில் மாணவர்கள் தங்கியிருந்த பிஜி விடுதி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய மாணவர் ஒருவர், அங்கிருந்தபடியே உதவி கேட்டு வீடியோ ஒன்றை எடுத்துத் தனது நண்பருக்கு அனுப்பியுள்ளார். 11 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், மாணவரின் முகம் தூசி மற்றும் இரத்தக் கறைகளுடன் காணப்படுவதோடு, சுற்றிலும் கட்டிட இடிபாடுகள் நிறைந்துள்ள காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

இடிபாடுகளுக்குள் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், மீட்புக் குழுவினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்புப் படை, டெல்லி தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சில மாணவர்கள் இடிபாடுகளுக்கு அடியிலிருந்தபடியே தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தங்களை காப்பாற்றுமாறு உதவி கோரி வருகின்றனர்.

Advertisement

இந்தக் கட்டிடம் சுமார் 20 ஆண்டுகள் பழமையானது என்றும், தரைத்தளத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்ததே விபத்திற்குக் காரணம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் இதுவரை பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in