LATEST NEWS
ஒரு பொண்டாட்டி இருக்கும்போது ரெண்டாவது பொண்டாட்டி எதுக்கு..? முதல்வர் விஜய் ஏன் அமைதியாக இருக்கிறார்..? திமுக மாஜி அமைச்சர் விளாசல்..!!
மும்மொழி கொள்கை விஷயத்தில் தமிழகத்தின் உரிமைகளை தவெக அரசு விட்டுக்கொடுப்பது போல் இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ₹3,000 கோடி கல்வி நிதியை நிறுத்தி வைத்துள்ள போதிலும், அதனை எதிர்த்து தவெக தலைவர் விஜய் குரல் கொடுக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். தமிழ்நாட்டில் தாய்மொழியாக தமிழும், இணைப்பு மொழியாக ஆங்கிலமும் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், இந்த இருமொழிக் கொள்கையில் எந்த சமரசமும் செய்யக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
அன்னிய மொழியான ஹிந்தி தமிழகத்திற்குள் நுழையக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த அவர், இதனை விளக்குவதற்கு ஒரு விசித்திரமான உதாரணத்தைக் கையாண்டார். “ஒரு மனைவி இருக்கும்போது இரண்டாவது மனைவி எதற்கு?” என்று கேள்வி எழுப்பிய ஐ.பெரியசாமி, ஏற்கனவே இரு மொழிகள் இருக்கும்போது மூன்றாவதாக ஒரு மொழி நமக்குத் தேவையில்லை என்பதை இந்த ஒப்பிட்டின் மூலம் வெளிப்படுத்தினார். தவெக-வின் தற்போதைய அரசியல் நகர்வுகள் தமிழகத்தின் மொழி உரிமைகளைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அவர் தனது பேட்டியில் கவலை தெரிவித்துள்ளார்.
