“கண் முன்னே போன உயிர்கள்…” ரத்த வெள்ளத்தில் கிடந்த பிள்ளைகளைப் பார்த்து கதறிய தந்தை… காண்போரை கலங்கவைத்த விபத்து… தருமபுரியில் சோகம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கண் முன்னே போன உயிர்கள்…” ரத்த வெள்ளத்தில் கிடந்த பிள்ளைகளைப் பார்த்து கதறிய தந்தை… காண்போரை கலங்கவைத்த விபத்து… தருமபுரியில் சோகம்..!!

Published

on

தருமபுரியில் தந்தை கண் முன்னே விபத்தில் சிக்கி இரண்டு பிஞ்சுக் குழந்தைகள் துடிதுடித்து உயிரிழந்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஹரி என்பவர் தனது மகன்களான கதிர்வேல் (6) மற்றும் சஞ்சய் (3) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் . அப்போது எதிர்பாராதவிதமாக பைக் நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்தது .

அந்த சமயத்தில், இவர்களின் பின்னால் வேகமாக வந்த லாரி ஒன்று, கீழே விழுந்த இரண்டு குழந்தைகள் மீதும் ஏறியது . இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இரண்டு சிறுவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர் . தங்களின் கண் முன்னே பெற்ற பிள்ளைகள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்ததைக் கண்டு தந்தை ஹரி கதறி அழுத காட்சி, விபத்தை நேரில் பார்த்த அனைவரையும் நிலைகுலையச் செய்து வேதனையில் ஆழ்த்தியது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in