LATEST NEWS
நாளையே கடைசி நாள்..! கேஸ் சிலிண்டர் வச்சிருக்கவங்க உடனே இத பண்ணுங்க… இல்லனா மானியம் கட், கனெக்ஷன் ரத்தாகும் அபாயம்..!
சமையல் கேஸ் சிலிண்டருக்கான E-KYC சரிபார்ப்பை முடிப்பதற்கான காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது. மத்திய அரசு இந்த காலக்கெடுவை ஏற்கனவே பலமுறை நீட்டித்துள்ளதால், இனிமேலும் கால அவகாசம் வழங்கப்பட வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எல்பிஜி நுகர்வோர் அனைவரும் நாளைக்குள் தங்களது E-KYC செயல்முறையை விரைந்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பாக, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாதிட்டத்தின் கீழ் கேஸ் இணைப்பு பெற்றவர்கள் நாளைக்குள் இந்த சரிபார்ப்பை முடிக்காவிட்டால், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிலிண்டர் மானியம் நிறுத்தப்படும். மேலும், E-KYC செய்யத் தவறினால் தங்களின் கேஸ் இணைப்புகள் முற்றிலும் ரத்தாகக் கூடிய அபாயமும் உள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க, நுகர்வோர் உடனடியாக தங்களது கேஸ் விநியோகஸ்தர் நிறுவனத்திற்கு நேரில் சென்று E-KYC-யை நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
