LATEST NEWS
“LPG வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்..!” உடனே இந்த வேலையை முடியுங்க.. இல்லைனா.. நாளை கடைசி நாள்.. வெளியான முக்கிய அறிவிப்பு..!!
LPG சிலிண்டருக்கான e-KYC நடைமுறையை நிறைவு செய்வதற்கான கால அவகாசம் நாளை முடிவடைகிறது. இந்த இறுதி கெடுவுக்குள் வாடிக்கையாளர்கள் தங்களது e-KYC-ஐ சமர்ப்பிக்காவிட்டால், அவர்களுக்கு வழங்கப்படும் அரசு மானியம்உடனடியாக நிறுத்தப்படும் என்று பொதுத்துறை எரிவாயு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. e-KYC செய்யாததால் உங்களுடைய எரிவாயு இணைப்பு முற்றிலும் ரத்து செய்யப்படாது என்றாலும், இனி வரும் காலங்களில் மானிய விலையில் வீட்டு உபயோக சிலிண்டர்களைப் பெற முடியாது.
இதன் காரணமாக, வாடிக்கையாளர்கள் சந்தை விலைக்கு (Market Price) முழுத் தொகையையும் கொடுத்து அதிக விலையில் சிலிண்டர் வாங்க வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்படும். கூடுதல் செலவைத் தவிர்க்க, எல்பிஜி நுகர்வோர் அனைவரும் தங்களின் ஆதார் அட்டை மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலமாக உடனே ஆன்லைனிலோ அல்லது தங்களின் எரிவாயு விநியோகஸ்தர் அலுவலகத்திற்குச் சென்றோ e-KYC நடைமுறையை விரைந்து நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
