LATEST NEWS
இந்தியா பிற்போக்கான நாடா..? நான் சொல்ல போற உண்மை …”விமர்சகர்களுக்கு நெதர்லாந்து பெண் கொடுத்த மாஸ் பதிலடி வைரல்..!!
சோஷியல் மீடியாவில் ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்த இவானா என்ற வெளிநாட்டுப் பெண்ணின் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாக வைரலாகி வருகிறது. இதில், இந்தியாவை ‘பின்தங்கிய’ நாடு என்று சொல்பவர்களுக்கு அவர் தகுந்த பாடம் புகட்டியுள்ளார். தற்போது மும்பையில் வசித்து வரும் இவானா, விமர்சகர்களுக்கு நேரடியாகப் பதிலளிக்கும் வகையில், பல விஷயங்களில் இந்தியா மேலை நாடுகளை விட மைல்கள் தூரம் முன்னணியில் உள்ளது என்று கூறியுள்ளார். வைரல் வீடியோவின் தொடக்கத்தில் ‘இந்தியா ஹேட்டர்ஸ்க்கு’ நேரடி எச்சரிக்கை விடுத்த இவானா, “நீங்கள் இந்தியாவை வெறுப்பவர் என்றால், இந்த வீடியோவை உடனே ஸ்வைப் செய்து விடுங்கள்; ஏனென்றால் நான் சொல்லப்போகும் விஷயம் உங்களுக்கு மேலும் கோபத்தை மூட்டும்” எனக் கூறியுள்ளார். சிலர் தங்களின் பாதுகாப்பற்ற தன்மை மற்றும் பழைய பிற்போக்குத்தனமான சிந்தனையின் காரணமாகவே இந்தியாவைத் தாழ்த்திப் பேச முயல்கிறார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வளர்ச்சியைக் குறிப்பிடுவதற்கு உதாரணமாக, இங்குள்ள ‘க்விக்-காமர்ஸ்’ விநியோக சேவையை இவானா சுட்டிக்காட்டினார். சமீபத்தில் ஒரு செயலி மூலம் தான் ஆர்டர் செய்த பூக்கள், வெறும் 10 நிமிடங்களுக்குள் தனது வீட்டுக் கதவுக்கே வந்து சேர்ந்ததாக அவர் கூறியுள்ளார். “மக்கள் இந்தியாவைப் பின்தங்கிய நாடு என்று சொல்கிறார்கள்? ஆனால் எனக்கு வெறும் 10 நிமிடங்களில் புதிய பூக்கள் கிடைத்துவிட்டன” என்று வியப்புடன் தெரிவித்தார். இந்தியாவில் சில பிரச்சனைகள் இருந்தாலும், வசதி மற்றும் தொழில்நுட்ப விஷயங்களில் இது பல நாடுகளை விட மிகவும் முன்னணியில் சென்றுவிட்டது என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
https://www.instagram.com/reel/Dc_HDdnzGdg/?utm_source=ig_web_button_share_sheet
சேலை அணிந்து, தலையில் பூச்சூடியபடி உள்ள இவானாவின் இந்த தோற்றத்தையும் ஸ்டைலையும் சமூக வலைத்தளப் பயனர்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். இவீடியோவின் கீழ் கமெண்ட் செய்து வரும் மக்கள், இந்திய கலாச்சாரத்தையும் இங்குள்ள டிஜிட்டல் மற்றும் அதிவேகச் சேவைகளையும் புகழ்ந்து பேசி வருகின்றனர். “இந்தியாவில் இப்போது எல்லாமே ஆப் மூலம் கண் இமைக்கும் நேரத்தில் கிடைத்துவிடுகிறது” என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார்.
