தேர்தல் முடிஞ்சதும் கோடிகளைத் தூக்கிக்கொண்டு வந்த அரசியல் புள்ளிகள்… 2 பெட்டி நிறைய பணம்… விரும்பிய அமைச்சர் பதவி… தமிழக அரசியலை உலுக்கும் எம்.எல்.ஏ சையது ஃபாருக் பாஷாவின் பகிரங்க குற்றச்சாட்டு..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தேர்தல் முடிஞ்சதும் கோடிகளைத் தூக்கிக்கொண்டு வந்த அரசியல் புள்ளிகள்… 2 பெட்டி நிறைய பணம்… விரும்பிய அமைச்சர் பதவி… தமிழக அரசியலை உலுக்கும் எம்.எல்.ஏ சையது ஃபாருக் பாஷாவின் பகிரங்க குற்றச்சாட்டு..!

Published

on

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமக்குக் கோடிக்கணக்கான பணமும், விரும்பிய அமைச்சர் பதவியும் தருவதாகக் கூறிப் பேரம் பேசியதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. சையது ஃபாருக் பாஷா பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார். திருவண்ணாமலையில் நடைபெற்ற கட்சியின் மாவட்டப் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், தேர்தல் முடிவடைந்ததும் சில முக்கிய அரசியல் தலைவர்கள் தம்மையும், தற்போதைய அமைச்சரான ஏ.எம். ஷாஜகானையும் நாடி வந்ததாகத் தெரிவித்தார். இரண்டு பெட்டிகளில் கோடிக்கணக்கான பணத்தைக் கொண்டு வந்து தங்களை ஆதரிக்குமாறு வற்புறுத்தியதுடன், லெட்டர் பேடில் கையெழுத்திட்டுத் தருமாறும் அவர்கள் பேரம் பேசியதாக பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.

தங்களுக்கு எந்தத் துறை வேண்டும் என்பதில் உள்ளாட்சித் துறையா அல்லது போக்குவரத்துத் துறையா என விருப்பமான அமைச்சர் பதவியைத் தேர்ந்தெடுக்கும்படி ஆசை காட்டியதாகவும் அவர் விவரித்தார். இருப்பினும், தாங்கள் கோடிக்கணக்கான பணத்திற்குப் பணிந்து போகாமல் கட்சியின் கொள்கைகளுக்காக உறுதியுடன் நின்றதாகவும், அந்தப் பேரங்களை நிராகரித்து அவர்களைத் திருப்பி அனுப்பியதாகவும் சையது ஃபாருக் பாஷா பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போதைய தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in