ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கிய வீடியோ..! சிரிச்சிகிட்டே டாட்டா… பறக்கும் முத்தம்… “பை பை அப்பா” எனக்கூறி அடுத்த நொடி ஆற்றில் குதித்த 21 வயது இளம்பெண்.. !! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கிய வீடியோ..! சிரிச்சிகிட்டே டாட்டா… பறக்கும் முத்தம்… “பை பை அப்பா” எனக்கூறி அடுத்த நொடி ஆற்றில் குதித்த 21 வயது இளம்பெண்.. !!

Published

on

ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் 21 வயதான பாயல் தேவி என்ற இளம்பெண் செனாப் ஆற்றுப் பாலத்திலிருந்து குதித்த அதிர்ச்சிச் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. திருவிழாவிற்குச் சென்றிருந்த அவர், திடீரென உடல்நிலை சரியில்லை எனக் கூறி மருத்துவரைச் சந்திக்கச் சென்றுவிட்டு, கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பாலத்தின் மீது வந்தபோது, திடீரென வாகனத்திலிருந்து இறங்கி பாலத்தின் விளிம்பிற்கு ஓடி ஆற்றில் குதிக்க முயன்றுள்ளார்.

அங்கிருந்த பொதுமக்களும் உறவினர்களும் அவரைத் தடுக்க எவ்வளவோ முயன்றும் அது தோல்வியில் முடிந்தது. அவர் ஆற்றில் குதிப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு, அவரது தந்தை போனில் அவரிடம் பேச முயன்றுள்ளார். அப்போது தந்தையிடம் பேசிய பாயல், “பை பை அப்பா” என்று கூறிவிட்டு ஆற்றில் குதித்ததாகத் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அதில் அவர் சிரித்தபடியும், கையசைத்தபடியும் இருப்பது காண்போரை நெஞ்சை உலுக்கச் செய்துள்ளது.

Advertisement

வெளியில் சிரித்த முகத்துடன் காணப்படும் நபர்கள் கூட, தங்களுக்குள் கடுமையான மனப் போராட்டங்களை எதிர்கொண்டிருக்கலாம் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துவதாக உள்ளூர்வாசிகள் கவலை தெரிவிக்கின்றனர். தற்போது மாநில பேரிடர் மீட்புப் படையினரும் உள்ளூர் காவல்துறையினரும் இணைந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பாயல் தேவியைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in