LATEST NEWS
ஸ்டாலின் முகத்தில் இருக்கும் அந்த தழும்பு என்ன தெரியுமா..? உண்மையை உடைத்த டி.ஆர்.பி ராஜா… அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்..!!
முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் முகத்தில் இருக்கும் தழும்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் மிக உருக்கமாகவும் அதே நேரத்தில் காரசாரமாகவும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்தத் தழும்பு வெறும் காயம் அல்ல என்றும், அது அவசரநிலைக் காலத்தில் (மிசா ) சிறையில் அடக்குமுறையை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்ட ஒரு தியாகப் போராளியின் வீரத்தழும்பு என்றும் அவர் பெருமிதத்தோடு குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயகத்தைக் காப்பதற்காக மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்ட வலியும், எதற்கும் அஞ்சாத அவரது மகத்தான அரசியல் வரலாறும் அந்தத் தழும்புக்கு பின்னால் ஒளிந்திருப்பதாக அவர் விவரித்துள்ளார். மேலும், சர்வாதிகாரத்தை எதிர்த்து அவர் பெற்ற இந்த காயங்களை வரலாறு என்றும் ‘விழுப்புண்’ என்றே போற்றும் என்றும், இது அவருக்கு அவமானமல்ல, தமிழ்நாட்டைக் காக்க அவர் சிந்திய இரத்தத்தின் அடையாளம் என்றும் டிஆர்பி ராஜா வாதிட்டுள்ளார்.
இறுதியாக, ஒரு ஜனநாயக விபத்தின் காரணமாக இன்று முதலமைச்சராகியுள்ள நடிகர் ஜோசப் விஜய் போன்றவர்கள், இந்த அரசியல் வரலாற்று பெருஞ்சிகரத்தை என்றென்றும் எட்ட முடியாது என மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். தியாக வரலாற்றை உணராத அரசியல் அறிவற்றவர்களின் கேலிச் சிரிப்புதான் உண்மையான அழிக்க முடியாத அவமானத் தழும்பு என்று கூறி, போராட்டக் காயத்தை கேலி செய்பவர்களின் செயலை அற்பத்தனம் எனச் சாடியுள்ளார்.
