ஒரே அறையில், ஒரே துப்பட்டாவில் தொங்கிய காதலர்கள்… 3 ஆண்டு ரகசிய காதலின் பின்னணியில் இருந்த பேரதிர்ச்சி உண்மை.. பெற்றோர் கிளப்பும் மர்மம்… வெளியான திடுக்கிடும் சம்பவம்…!! – cinefeeds
Connect with us

CRIME

ஒரே அறையில், ஒரே துப்பட்டாவில் தொங்கிய காதலர்கள்… 3 ஆண்டு ரகசிய காதலின் பின்னணியில் இருந்த பேரதிர்ச்சி உண்மை.. பெற்றோர் கிளப்பும் மர்மம்… வெளியான திடுக்கிடும் சம்பவம்…!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவின் ரஹன்கலான் கிராமத்தில், கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்த இந்திராவதி (20) மற்றும் பிரேம் (22) ஆகிய இருவர் ஒரே அறையில் துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது. காதலியின் வீட்டில் ஒரே தூக்கில் பிணமாக மீட்கப்பட்ட இவர்களது காதலுக்கு, இளைஞரான பிரேமிற்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது ஒரு பெரும் தடையாக இருந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருப்பினும், இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி இளைஞரின் குடும்பத்தினர் இது தற்கொலை அல்ல, திட்டமிட்ட கொலை என்று காதலியின் வீட்டார் மீது கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதோடு, இது காதலின் தோல்வியால் ஏற்பட்ட தற்கொலையா அல்லது கௌரவக் கொலையா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in