“நான் இஸ்ரோவுல வேலை பார்க்கிறேன்..!” இன்ஸ்டாகிராமில் ஆசைவார்த்தை கூறி 30-க்கும் மேற்பட்ட பெண்களை வேட்டையாடிய காம கொடூரன்.. திடுக்கிட வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“நான் இஸ்ரோவுல வேலை பார்க்கிறேன்..!” இன்ஸ்டாகிராமில் ஆசைவார்த்தை கூறி 30-க்கும் மேற்பட்ட பெண்களை வேட்டையாடிய காம கொடூரன்.. திடுக்கிட வைக்கும் பின்னணி..!!

Published

on

கர்நாடக மாநிலம் விஜயாப்புராவைச் ஈரண்ணா படிகர் என்ற டிப்ளமோ படித்த நபர் வசித்துவந்தார். இவர் இஸ்ரோவில் விஞ்ஞானியாக வேலை பார்ப்பதாக இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கி 30-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிப் பணம் பறித்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில் தற்பொழுது அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். தான் நினைத்தால் இஸ்ரோவில் எளிதாக வேலை வாங்கித் தர முடியும் என ஆசைவார்த்தை கூறி, கதக், விஜயாப்புரா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வாலிபர்களிடம் பல லட்சம் ரூபாயைப் பறித்துள்ளார். அதுமட்டுமின்றி, 30-க்கும் மேற்பட்ட இளம்பெண்களுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவர்களைத் தனது காதல் வலையில் வீழ்த்தி, பணத்தைப் பறித்ததோடு அவர்களிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார்.

பணம் கொடுத்தவர்கள் வேலை குறித்து நெருக்கடி கொடுக்கத் தொடங்கியவுடன், தனது இன்ஸ்டாகிராம் கணக்கை அழித்துவிட்டு அலைபேசி எண்ணையும் மாற்றித் தலைமறைவாகியுள்ளார். இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்டவர்கள் கதக் டவுன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து ஈரண்ணா படிகரை அவரது வீட்டில் வைத்து அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடம் நடத்திய சோதனையில், பல்வேறு நபர்களிடம் வாங்கிய கடனை அடைப்பதற்காகவே இந்த விபரீத மோசடியில் ஈடுபட்டதாகக் ஒப்புக்கொண்டார்; மேலும் அவரது அலைபேசியில் இருந்து ஏராளமான ஆபாசப் படங்கள் கைப்பற்றப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in