LATEST NEWS
“இந்தி தெரியாதுன்னு இப்படியா கேவலமா பேசுவ..?!” பெண் ஊழியரிடம் ஆபாசமாக வாலட்டிய லாரி டிரைவர்கள்.. பெண் செய்த காரியத்தை பாருங்க.. நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த சம்பவம்..!!
கர்நாடக மாநில எல்லையில் லாரிகளின் எடையைச் பரிசோதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண் ஊழியர் ஒருவருக்கு இந்தி மொழி தெரியாததை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, லாரி ஓட்டுநர்கள் இருவர் அவரது கேபினுக்குள் நுழைந்து காதில் கேட்கக்கூடாத மிகக் கேவலமான ஆபாச வார்த்தைகளால் அவரை இந்தியில் திட்டித் தீர்த்துள்ள அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணுக்குக் கன்னடமும் ஆங்கிலமும் மட்டுமே தெரியும் என்பதால், இந்தி பேசும் பெண்கள் யாராவது கேட்டால் செருப்பால் அடிக்கக்கூடிய அளவிற்கு அவர்கள் பேசிய அநாகரிகமான கெட்ட வார்த்தைகள் துளியும் புரியாமல், அந்தப் பெண் மிகவும் எதார்த்தமாகச் சிரித்துக் கொண்டே அவர்கள் சொல்வது தனக்கு புரியவில்லை என்று கூறியுள்ளார். அந்தப் பெண்ணின் அறியாமையைக் கிண்டல் செய்து கொண்டு அந்த ஓட்டுநர்கள் தொடர்ந்து ஆபாசமாகப் பேசிய நிலையிலும், அந்தப் பெண் லாரியின் எடைக்கான ரசீதை அவர்களிடம் வழங்கி அவர்களை இன்முகத்தோடு அனுப்பி வைத்துள்ளார்.
தான் கேபினுக்குள் இருந்தபோது நடந்த இந்த விசித்திரமான சம்பவத்தை அந்தப் பெண் தனது போனில் வீடியோவாகப் பதிவு செய்து சோசியல் மீடியாவில் பதிவிட்ட பிறகுதான், அந்த ஓட்டுநர்கள் எவ்வளவு கொடூரமான கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளனர் என்ற அசல் உண்மை அம்பலமாகி நெட்டிசன்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது. ஒரு பெண்ணுக்கு இந்தி மொழி தெரியாது என்பதற்காக அவளை இப்படியா பொதுவெளியில் அநாகரிகமாகக் கேலி செய்து ஆபாசமாகத் திட்டுவது என்று வடமாநில ஓட்டுநர்களின் இந்த வெறிச்செயலுக்கு எதிராகப் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையில் எல்லையில் அநாகரிகமாக நடந்துகொண்ட அந்த லாரி ஓட்டுநர்களை உடனடியாகக் கண்டுபிடித்துக் கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என்றும், இத்தகைய சைக்கோக்கள் லாரி ஓட்டவே தகுதியற்றவர்கள் என்றும் இணையத்தில் தற்போது கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
