LATEST NEWS
சோஃபா செட் இல்ல… பீரோ, லாக்கரே வந்தாலும்கூட அது மட்டும் நடக்கவே நடக்காது … தவெக குறித்து பிரேமலதா திட்டவட்டம்..!!
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடலூரில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தேமுதிகவுக்கு கூட்டணி அழைப்புகள் வரவில்லை என்று யாரும் நினைக்க வேண்டாம் எனக் குறிப்பிட்டதுடன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்களை கூட்டணிக்கு அழைத்ததாகத் தெரிவித்தார்.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் கொள்கை மற்றும் நேர்மைக்கு முன்னுரிமை அளிப்பதாக அவர் உறுதியளித்தார். தங்களுக்குப் பல சலுகைகளும், வசதிகளும் முன்வைக்கப்பட்டாலும் தேமுதிக தனது கொள்கை நிலைப்பாட்டில் இருந்து ஒருபோதும் மாறாது என்று அவர் கூட்டத்தில் திட்டவட்டமாகப் பேசினார்.
தேமுதிக எந்தவொரு சூழ்நிலையிலும் தன்னுடைய சுயமரியாதையையும் கொள்கையையும் விட்டுக்கொடுக்காது என்பதை அவர் தொண்டர்களிடையே தெளிவுபடுத்தினார். அரசியல் ஆதாயங்களை விட கட்சியின் லட்சியங்களே தங்களுக்கு மிக முக்கியம் என்று கூறி தனது பேச்சை அவர் நிறைவு செய்தார்.
