LATEST NEWS
“மக்களுக்கு விளக்கம் சொல்லியே ஆகணும்..” முதல்வர் விஜய்க்கு பிரேமலதா விடுத்த அதிரடி சவால்.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக அரங்கேறி வரும் கொலை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, தீபாவளி பண்டிகை நாளன்று மட்டும் காவலர் ஒருவர் உட்பட 9 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் மிகுந்த கவலையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதை இந்தச் சம்பவங்கள் காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழகத்தில் நிலவி வரும் இந்தச் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்தும், நடந்துள்ள வன்முறைச் சம்பவங்கள் குறித்தும் மக்களுக்கு முதலமைச்சர் விஜய் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கடமை அரசுக்கு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், குற்றச் சம்பவங்களைத் தடுக்கக் கடுமையான நடவடிகைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தன் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
