LATEST NEWS
“என்னது..! குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.52 லட்சமா..? எங்கு தெரியுமா..?”கல்யாணமான தம்பதிகளுக்கு பிரதமர் வெளியிட்ட மெகா அதிரடி ஆஃபர்..!!
மக்கள் தொகை எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருவதைத் தொடர்ந்து, குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங்கின் அறிவுறுத்தலின்படி குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்குச் சுமார் 52 லட்சம் ரூபாய் மெகா ஊக்கத் தொகை வழங்கப்படும் எனச் சிங்கப்பூர் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. கல்வி மற்றும் குழந்தைகள் பராமரிப்புச் செலவுகள் குறித்த கவலையால் தற்கால இளம் தம்பதிகள் குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போடுவதோடு, ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றுக் கொள்ள விரும்புவதில்லை என்பதை உணர்ந்த அரசாங்கம் இந்த உன்னத முடிவை எடுத்துள்ளது. ஆகஸ்ட் 23-ஆம் தேதி தேசிய நாளை முன்னிட்டுப் பிரதமர் விடுத்த அறிவிப்பின்படி, கடந்த 2023-இல் அறிமுகப்படுத்தப்பட்ட ரொக்கப் பரிசுத் திட்டம் தற்போது அசுரத்தனமாக உயர்த்தப்பட்டு, தம்பதிகளுக்குப் பெரும் நிதியுதவியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மெகா ஊக்கத் தொகையான 52 லட்சம் ரூபாயானது, குழந்தைகளின் 17 வயது வரை ஆண்டுதோறும் குறிப்பிட்ட தவணைகளாகப் பெற்றோருக்குப் பிரித்து வழங்கப்படும் என்று சிங்கப்பூர் அரசின் செய்தித் தொடர்பாளர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். இந்த அதிரடித் திட்டத்தின் பலன்கள் அனைத்தும் கடந்த 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதிக்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்கு மட்டுமே முழுமையாகப் பொருந்தும் என்றும், இதோடு சேர்த்து குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளைக் குறைக்கும் பவர்ஃபுல் நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
