“எனக்கு 6 வயசிருக்கும்போது…” என் கண் முன்னாடியே என்னுடைய அம்மா… மேடையில் கண்கலங்கி பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எனக்கு 6 வயசிருக்கும்போது…” என் கண் முன்னாடியே என்னுடைய அம்மா… மேடையில் கண்கலங்கி பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..!!

Published

on

சென்னையில் நடைபெற்ற மத நல்லிணக்க மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது தனது சிறுவயது வாழ்க்கையில் ஏற்பட்ட பெரும் இழப்பையும், சோகத்தையும் மேடையில் பகிர்ந்து கொண்டு அவர் பேசினார்.

தனக்கு 6 வயதாக இருந்தபோது தனது அம்மா தற்கொலை செய்துகொண்டார் என்ற அதிர்ச்சியான உண்மையை அவர் உருக்கமுடன் நினைவு கூர்ந்தார். மேலும், தனது தாய் ஒரு விவசாயி என்பதைப் பெருமையுடன் குறிப்பிட்ட அவர், அதன் காரணமாகவே விவசாயிகளின் கஷ்டங்களையும், அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் சிரமங்களையும் தான் நேரடியாக உணர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.

Advertisement

விவசாயப் பின்னணியைக் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்ததால், விவசாயிகளின் வாழ்வாதாரப் போராட்டங்களை தம்மால் எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது என்று அவர் கூறினார். தனது தாயின் இழப்பை எண்ணிப் பேசிய அவரது இந்த உருக்கமான பேச்சு அங்கிருந்தவர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in