CRIME
என்ன கொடுமை இது..! “பாய்கட் ஹேர்ஸ்டைல் வச்சிருக்கா… அரைகுறை ஆடை போடுறானு… பெத்த தகப்பனே செஞ்ச கொடூரம்… குவாலியர்ல அரங்கேறிய நெஞ்ச உலுக்கும் பயங்கரம்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரின் டப்ரா பகுதிக்குட்பட்ட பிச்சோர் காவல் எல்லைக்குட்பட்ட பத்தரியாபுரா கிராமத்தில், 21 வயதான அனு என்ற நந்தினி யாதவ் என்ற யுவதி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் விஜய்பூரில் உள்ள ஒரு மாலில் வேலை பார்த்து வந்த அனு, ரக்ஷா பந்தன் பண்டிகைக்காக தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். அனுவின் ‘பாய்கட்’ தலைமுடி ஸ்டைல், அவரின் நவீன ஆடைகள் மற்றும் வெளியூரில் சென்று வேலை செய்வது போன்றவை அவரது குடும்பத்தினருக்குப் பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
திங்கள்கிழமை மதியம் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டபோது, அனுவின் தந்தை பகவான் சிங் யாதவ் மற்றும் அவரது சகோதரர் சந்தோஷ் யாதவ் ஆகியோர் முதலில் வீட்டில் இருந்த 17 வயது சிறுமியைத் தாக்கி, அவரது தொண்டையை நெரிக்க முயன்றனர். அப்பெண்ணின் தாய் தலையிட்டு அவரைக் காப்பாற்றினார். அதன்பின், இருவரும் அனு இருந்த மற்றொரு வீட்டிற்குச் சென்று அவருடன் தகராறில் ஈடுபட்டு, அவரைத் தாக்கி கழுத்தை நெரித்துக் கொன்றனர்.
சம்பவத்திற்குப் பிறகு தந்தையும் சித்தப்பாவும் தலைமறைவாகினர். தகவலறிந்த பிச்சோர் காவல் நிலையப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். காவல் ஆய்வாளர் சிவம் சிங் ராஜாவத் தலைமையிலான குழு, ஊருக்கு வெளியே பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளியான தந்தை பகவான் சிங் யாதவைக் கைது செய்தது. ஆரம்பக்கட்ட விசாரணையில் இது ஆணவக் கொலை (Honor Killing) போலத் தெரிவதாக SDOP சவுரப் குமார் தெரிவித்துள்ளார். தலைமறைவாக உள்ள சித்தப்பா சந்தோஷ் யாதவை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
