CRIME
“கிழவியைக் கொன்னுட்டேன் வாடா..!” தம்பியை விருதுநகரிலிருந்து வரவழைத்த கொலையாளி… நாகர்கோவில் மூதாட்டி கொலையில் அவிழ்ந்த பகீர் மர்மம்..!!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில், நகைகளுக்காக 78 வயது மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்டு, தடயங்களை அழிக்கக் கேஸ் அடுப்பால் அவரது தலைமுடி எரிக்கப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடிவீஸ்வரத்தில் தனியாக வசித்து வந்த சின்னம்மாள் என்ற மூதாட்டி, நேற்று மதியம் அவரது வீட்டிற்குள் கை மற்றும் தலைமுடி எரிக்கப்பட்ட நிலையில் ரத்தக் காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது கழுத்து மற்றும் பீரோவில் இருந்த சுமார் 35 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததால், கோட்டார் தனிப்படை போலீஸார் அப்பகுதியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிரத் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
போலீஸாரின் அதிரடி விசாரணையில், மூதாட்டியின் வீட்டருகே முன்பு மாட்டுப் பண்ணையில் வேலை பார்த்த விருதுநகரைச் சேர்ந்த வேல்ராஜ் (33) என்பவரே இந்தக் கொலையாளி என்பது துல்லியமாகக் கண்டறியப்பட்டது. வேலை மற்றும் பணம் தர மறுத்த சின்னம்மாளைத் தாக்கி மயக்கமடையச் செய்த வேல்ராஜ், அவர் தன்னைத் காட்டிக் கொடுத்துவிடுவார் என்ற அஞ்சியதால் அவரைத் தீர்த்துக்கட்டிவிட்டு, கேஸ் அடுப்பைப் பற்றவைத்து உடலை எரிக்க முயன்றுள்ளார. பின்னர், தடயங்களை மறைப்பதற்காகத் தனது சகோதரர் அரவிந்தை விருதுநகரிலிருந்து வரவழைத்து, நகைகளுடன் தப்பிக்கத் திட்டமிட்டு இருவரும் மது அருந்திக் கொண்டிருந்த போது போலீஸார் அவர்களைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 40 பவுன் நகைகள் மீட்கப்பட்டு, இருவரும் தற்பொழுது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
