LATEST NEWS
“உங்களை சிஎம் ஆக்கியவர்கள் இப்போ ரோட்டுல நிற்காங்க” நீங்க கொடுத்த வாக்குறுதி என்னாச்சு..? முதல்வர் விஜய்க்கு எதிராக ஷனம் ஷெட்டி கொதிப்பு..!!
சென்னை ரிப்பன் மாளிகை முன்பு பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தூய்மைப் பணியாளர்கள் இன்று 12-வது நாளாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டக் களத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த நடிகை ஷனம் ஷெட்டி, தூய்மைப் பணியாளர்களுடன் கையில் பதாகை ஏந்திப் போராட்டத்தில் பங்கேற்றார்.
போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய ஷனம் ஷெட்டி, “உங்களை இன்று முதலமைச்சராக உட்கார வைத்த மக்கள் ரோட்டில் நிற்கிறார்கள்; அவர்களை நீங்கள் நேரில் வந்து பார்க்க வேண்டும்” என்று தமிழக முதல்வர் விஜய்க்கு அதிரடிக் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஆண்டு தவெக தலைவர் விஜய் இவர்களை நேரில் அழைத்து, ‘உங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் நான் இருக்கிறேன்’ என்று வாக்குறுதி அளித்ததை அவர் இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாநகராட்சியைத் தனியார்மயமாக்கக் கூடாது என்ற இவர்களின் கோரிக்கை நியாயமானது என்று குறிப்பிட்ட ஷனம் ஷெட்டி, கடந்த திமுக ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முப்பது ஆண்டுகாலப் பிரச்சினைக்கு இந்த ஆட்சியில் நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புவதாகத் தெரிவித்தார். தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி, ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தவர்களைப் பணி நிரந்தரம் செய்யும் கோரிக்கையை முதல்வர் விஜய் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நிறைவேற்றித் தர வேண்டும் என்றும் அவர் உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.
