“உங்களுக்குச் செய்யாமல் வேறு யாருக்கு பண்ணப்போறோம்..? உங்கள் அண்ணன் CM-ஆக இருக்கிறார்… நிச்சயம் செய்வோம்…” தூய்மைப் பணியாளர்களிடம் கலங்கிய அமைச்சர் CTR நிர்மல்குமார்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“உங்களுக்குச் செய்யாமல் வேறு யாருக்கு பண்ணப்போறோம்..? உங்கள் அண்ணன் CM-ஆக இருக்கிறார்… நிச்சயம் செய்வோம்…” தூய்மைப் பணியாளர்களிடம் கலங்கிய அமைச்சர் CTR நிர்மல்குமார்..!!

Published

on

தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தைக் கண்டு முதலமைச்சர் விஜய் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளதாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ரிப்பன் மாளிகையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களை அமைச்சர்கள் குழுவினரான ஆதவ், என். ஆனந்த், சி.டி.ஆர். நிர்மல்குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், “உங்களுக்குச் செய்யாமல் வேறு யாருக்குச் செய்யப் போகிறோம்? உங்களின் அண்ணன் முதலமைச்சராக இருக்கிறார்; எனவே, உங்களது கோரிக்கைகளில் முடிந்த அளவுக்கு அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றித் தருவோம்” எனத் தூய்மைப் பணியாளர்களுக்கு உறுதியளித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in