ஆஸ்தான ஜோதிடரின் கண்டிஷன்… ஒரு போட்டோவை மாத்த ரூ.6.17 கோடியா?.. முதல்வர் விஜய்யின் புதிய உத்தரவால் அதிரும் தமிழக அரசியல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஆஸ்தான ஜோதிடரின் கண்டிஷன்… ஒரு போட்டோவை மாத்த ரூ.6.17 கோடியா?.. முதல்வர் விஜய்யின் புதிய உத்தரவால் அதிரும் தமிழக அரசியல்..!!

Published

on

அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள முதலமைச்சர் விஜய்யின் புகைப்படம் திடீரென மாற்றப்பட்டு, புதிய படத்தை வைக்குமாறு அரசு சார்பில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது அனைத்து அரசு அலுவலகங்களிலும் வைப்பதற்காக ஒரு குறிப்பிட்ட புகைப்படம் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த புகைப்படத்தில் அவருடைய சிரிப்பும் தோற்றமும் செயற்கையாக இருப்பதாகத் தவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் பரவலாக விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, புதிய புகைப்படத்தைப் பயன்படுத்துமாறு தற்போது அரசாணை வெளியாகி உள்ளது.

புதிய உத்தரவில், ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள புகைப்படங்களை மாற்றிப் புதிய படத்தை வைக்கும் போது அரசு நிதி வீணடிக்கப்படக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், தமிழகத்தின் தலைமைச் செயலகம், 43 முதன்மைத் துறைகள், 38 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சிகள், நகராட்சிகள், வட்டார வளர்ச்சி மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்கள், காவல் நிலையங்கள் மற்றும் 12,500-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகள் என பல்லாயிரக்கணக்கான அரசு அலுவலகங்களில் இந்தப் புகைப்படங்களை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

இவ்வாறு அனைத்து அரசு நிறுவனங்களிலும் புகைப்படங்களை மாற்றி அமைப்பதற்கு தோராயமாக சுமார் ரூ.6.17 கோடி வரை செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிதியை புகைப்பட மாற்றத்திற்குச் செலவிடுவதைக் காட்டிலும், கழிப்பறை வசதி இல்லாத அரசுப் பள்ளிகளுக்குப் புதிய கழிப்பறைகளைக் கட்டுவதற்கோ அல்லது மாணவர்களுக்கான விளையாட்டு மைதானங்களை மேம்படுத்துவதற்கோ பயன்படுத்தலாம் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மற்றொரு புறம், இந்த புகைப்படம் மாற்றும் யோசனையை முதலமைச்சருக்கு வழங்கியது யார் என்பது குறித்து இணையவாசிகளிடையே விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. வழக்கமாக முதலமைச்சர் விஜய் தனது ஆஸ்தான ஜோதிடரின் ஆலோசனையின் பேரிலேயே முக்கிய முடிவுகளை எடுப்பார் எனக் கூறப்படும் நிலையில், இந்த புகைப்பட மாற்றத்திற்குப் பின்னணியிலும் ஜோதிடரின் ஆலோசனையே காரணியாக இருக்குமோ என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in