LATEST NEWS
ஐயோ கடவுளே… செல்ல நாய் நக்கிய ஒரே காரணத்திற்காக பறிபோன 4 உறுப்புகள்… அதிர்ச்சியில் உறைந்த ஒட்டுமொத்த குடும்பம்… நடுங்க வைக்கும் நிஜ சம்பவம்..!!
ஜூலை 2025-இல், 56 வயதான மன்ஜீத் சங்கர் என்பவருக்கு சாதாரண சளி போன்ற அறிகுறி மட்டுமே முதலில் இருந்தது. ஆனால், அடுத்த சில நாட்களிலேயே அது அவரது உயிருக்கே ஆபத்தாக மாறியது. மறுநாளே அவர் நினைவின்றி உதடுகள் நீல நிறமாகவும், கை கால்கள் குளிர்ந்து போன நிலையிலும் சோபாவில் கிடந்ததை அவரது கணவர் கண்டறிந்தார். அவரது நாயின் உமிழ்நீர் உடலில் இருந்த ஒரு சிறிய வெட்டுக்காயத்தில் பட்டதால் ஏற்பட்ட தொற்றே தீவிர ரத்த நச்சாக மாறியதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
அவரை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளித்தபோதிலும், மூன்று நாட்களில் அவரது இதயம் ஆறு முறை செயலிழந்தது. தீவிர ரத்த உறைவு காரணமாக கை கால்களுக்கு ரத்த ஓட்டம் முற்றிலும் தடைபட்டதால், மருத்துவர்கள் வேறு வழியின்றி அவரது இரு கால்களையும் முழங்காலுக்குக் கீழும், இரு கைகளையும் துண்டிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். மேலும், இந்த பாதிப்பினால் அவர் தனது மண்ணீரலையும் இழந்து, நுரையீரல் அழற்சி மற்றும் பித்தப்பை கற்கள் போன்ற பிற பாதிப்புகளுடனும் போராட வேண்டியிருந்தது.
மருத்துவமனையில் 32 வாரங்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு, பிப்ரவரி 2026-இல் தான் மன்ஜீத் இறுதியாக வீடு திரும்பினார். நான்கு உறுப்புகளையும் இழந்த நிலையில், தற்போது நவீன செயற்கை உறுப்புகளைப் பெற்று மீண்டும் பணிக்குச் செல்ல வேண்டும் என்ற நம்பிக்கையுடன் அவர் வாழ்வை எதிர்கொண்டு வருகிறார். “இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று அவர் அனைவரையும் எச்சரிக்கிறார்.
