அடக்கொடுமையே… பொண்டாட்டியை சமையல் பணியில் இருந்து தூக்கியதால் ஆத்திரம்… பள்ளி உணவில் சாணிப்பவுடரை கலந்த பாவி… கடைசி நிமிடத்தில் 51 பிஞ்சுகளைக் காப்பாற்றிய ஆசிரியையின் சாமர்த்தியம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடக்கொடுமையே… பொண்டாட்டியை சமையல் பணியில் இருந்து தூக்கியதால் ஆத்திரம்… பள்ளி உணவில் சாணிப்பவுடரை கலந்த பாவி… கடைசி நிமிடத்தில் 51 பிஞ்சுகளைக் காப்பாற்றிய ஆசிரியையின் சாமர்த்தியம்…!!

Published

on

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அரசுத் தொடக்கப் பள்ளி ஒன்றில் வழக்கம்போல வழங்கப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டச் சாம்பாரில், ஆறுமுகம் என்பவர் விஷம் (சாணி பவுடர்) கலந்துள்ள கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பள்ளியின் சமையல் பணியில் இருந்து தனது மனைவி நீக்கப்பட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், ஆறுமுகம் இந்த விபரீதச் செயலில் ஈடுபட்டுள்ளார். இவரைத் தற்போது காவல் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காலை உணவை மாணவர்களுக்குப் பரிமாறுவதற்கு முன்பாக, பள்ளி ஆசிரியை ஒருவர் சாம்பாரை ருசித்துப் பார்த்துள்ளார். அப்போது சாம்பார் வழக்கத்திற்கு மாறாகக் கசப்பாக இருந்ததை உணர்ந்த ஆசிரியை, உடனடியாக உணவுப் பரிமாற்றத்தைத் தடுத்து நிறுத்தி மாணவர்களைச் சாப்பிட விடாமல் தடுத்துள்ளார். ஆசிரியையின் இந்தச் சுதாரிப்பான மற்றும் சாமர்த்தியமான செயலால், கடைசி நேரத்தில் 51 பிஞ்சுக் குழந்தைகள் எவ்விதப் பாதிப்புமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in