LATEST NEWS
“விஜய் சார் என்னோட வீட்டிலயா உட்கார்ந்துகிட்டு இருக்காரு..?” உங்களுக்கு அவ்வளவு பயமா இருந்தா..? நீட் போராட்டத்தில் கொந்தளித்த நடிகை சனம் ஷெட்டி…!!
நீட் தேர்வுக்கு எதிரான தவெக அரசின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான சனம் ஷெட்டி போராட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நீட் போராட்டத்திற்கு ஆதரவு தராமல் முதலமைச்சர் விஜய் தலைமறைவாக இருப்பதாக எழுப்பப்படும் விமர்சனங்களுக்குத் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
விஜய் சார் எங்கே என்று கேட்டு யாரோ ஒருவர் போஸ்டர் பிடித்துக் கொண்டிருப்பதில் தனக்கு எவ்வித உடன்பாடும் இல்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். மேலும், “விஜய் சார் என் வீட்டிலா உட்கார்ந்து கொண்டிருக்கிறார்? உங்களைப் போலத்தான் நானும் இங்கே வந்திருக்கிறேன்; அவ்வளவு பயமாக இருந்தால் என்னை ஏன் இங்கு கூப்பிட்டீர்கள்?” என்று கோபத்துடன் கேள்வி எழுப்பினார்.
முதலமைச்சர் விஜய் இன்னும் இரண்டு நாட்களில் சென்னை திரும்பியவுடன் இந்த விவகாரத்தில் நல்லதொரு முடிவை எடுப்பார் என்று சனம் ஷெட்டி நம்பிக்கை தெரிவித்தார். போராட்டக் களத்தில் நடிகை சனம் ஷெட்டி ஆவேசமாகப் பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
