அந்த கடவுளுக்குத் தெரியும்… நான் அழுதது உண்மையா? பொய்யான்னு..? விஜயுடன் 20 வருஷமா.. விமர்சனங்களுக்கு அமைச்சர் பர்வேஸ் உணர்ச்சிப்பூர்வ பதிலடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அந்த கடவுளுக்குத் தெரியும்… நான் அழுதது உண்மையா? பொய்யான்னு..? விஜயுடன் 20 வருஷமா.. விமர்சனங்களுக்கு அமைச்சர் பர்வேஸ் உணர்ச்சிப்பூர்வ பதிலடி..!!

Published

on

“நான் ஒன்றும் தவெக கட்சி ஆரம்பித்த பின்னர் வந்தவன் அல்ல; கடந்த 2006-ஆம் ஆண்டில் இருந்தே 20 வருடங்களாகத் தளபதியுடன் பயணித்து வருகிறேன்” என்று அமைச்சர் பர்வேஸ் உணர்ச்சிப் பெருக்குடன் தெரிவித்துள்ளார். தான் கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே தளபதியின் ரசிகனாக மக்கள் மத்தியில் நின்று கவுன்சிலர் ஆனவன் என்பதை அவர் பெருமையுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த அவர், “இது என் தலைவரோட கடைசி படம் என்பதால் ஏற்பட்ட எமோஷனில் அழுதுவிட்டேன்; தியேட்டரில் நான் அழுதது இயற்கையானது” என்று விளக்கியுள்ளார். படம் பார்த்து அமைச்சர்கள் அழுததாக எதிர்க்கட்சிகள் கேலி செய்து வரும் நிலையில், இந்த விளக்கம் அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

Advertisement

மேலும், தனது உணர்வுகளைக் கொச்சைப்படுத்துபவர்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, “நான் அழுதது உண்மையா பொய்யா என்பது அந்த கடவுளுக்குத் தெரியும்” என்று நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார். படம் வெளியானதில் இருந்து தவெகவினர் மீதான விமர்சனங்கள் தொடர்ந்து வரும் வேளையில், இந்தத் தொண்டரின் எமோஷனல் பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in