“இந்தாங்க சார் கேக் சாப்பிடுங்க..!” அடுத்த முறை ‘கிடா’ வெட்டுவேன்… ஓலா ஷோரூம் வாசலில் கேக் வெட்டி கொண்டாடிய வாடிக்கையாளர்… என்ன நடந்ததுன்னு நீங்களே பாருங்க..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இந்தாங்க சார் கேக் சாப்பிடுங்க..!” அடுத்த முறை ‘கிடா’ வெட்டுவேன்… ஓலா ஷோரூம் வாசலில் கேக் வெட்டி கொண்டாடிய வாடிக்கையாளர்… என்ன நடந்ததுன்னு நீங்களே பாருங்க..!

Published

on

ஓலா மின்சார இருசக்கர வாகனத்தின் பழுதுகளைச் சரிசெய்யக் கொடுத்து நூறு நாட்களைக் கடந்தும் வாகனம் திரும்பக் கிடைக்காததால், விரக்தியடைந்த வாகன உரிமையாளர் ஒருவர் ஓலா நிறுவனத்தின் கடை வாசலிலேயே கேக் வெட்டித் தனது வினோதமான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். “இந்தாங்க சார் கேக் சாப்பிடுங்க.. நல்லா சாப்பிடுங்க..!” என்று அங்குள்ள ஊழியர்களுக்குக் கேக் ஊட்டிவிட்டு அவர் செய்த நூதனப் போராட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தான் வாங்கிய புதிய வண்டி திருட்டுப் போயிருந்தால் கூடப் பரவாயில்லை என்று விட்டுவிட்டுப் போயிருக்கலாம், ஆனால் பழுது நீக்கக் கொடுத்துவிட்டு இப்போது என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்து வருவதாக அவர் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், அடுத்த முறையும் இதே நிலை நீடித்தால் கடை வாசலிலேயே கிடா வெட்டிப் போராடப் போவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

Advertisement

https://twitter.com/polimernews/status/2080656563010932980/video/1

மின்சார வாகனங்களின் தரம் மற்றும் பழுது நீக்கும் சேவைகளில் உள்ள குளறுபடிகளைத் தோலுரித்துக் காட்டும் வகையில் அமைந்துள்ள இந்த நூதனப் போராட்டக் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் ஓலா மின்சார வாகனங்களைப் பயன்படுத்தி வரும் மற்ற வாடிக்கையாளர்களிடையேயும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in