LATEST NEWS
“யாருப்பா அமைச்சரு.?” அரசு முகாமில் ஆய்வு செய்த அமைச்சர் பர்வேஸின் அண்ணன்.. ரீல்ஸ் வீடியோ வெளியாகி சர்ச்சை.. செம கடுப்பில் தலைமை..!!
புதுக்கோட்டையில் நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு நலத்திட்ட முகாமில், அமைச்சர் பர்வேஸின் மூத்த சகோதரரான முகமது இப்ராஹிம் நேரில் சென்று ஆய்வு நடத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆய்வின்போது எடுக்கப்பட்ட காட்சிகளை கட்சி நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ வீடியோவாக வெளியிட்டதை அடுத்து, இந்த விவகாரம் இணையத்தில் மிக வேகமாக வைரலாகப் பரவியது. அரசு நிர்வாகப் பணிகளிலும், திட்டங்களிலும் கட்சி நிர்வாகிகள் யாரும் தலையிடக் கூடாது என்று அரசு கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இந்த விதிமுறையை மீறி ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
அமைச்சரின் குடும்ப உறுப்பினரோ அல்லது கட்சி நிர்வாகிகளோ அரசு அதிகாரப்பூர்வ முகாம்களில் தலையிட்டு ஆய்வு நடத்தியதற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் தற்பொழுது பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. விதிகளுக்குப் புறம்பாக அரசுப் பணிகளில் தலையிட்ட இந்தச் சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருவதால் இந்த விவகாரம் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
