“என் இரண்டாம் கருவறை விஜய்”… உயில் தான் எழுதி வைப்பாங்க.. ஆனா நான் என் உயிரையே தளபதிக்கு எழுதி கொடுப்பேன்… சட்டப்பேரவையில் அமைச்சர் பர்வேஸ் உருக்கம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என் இரண்டாம் கருவறை விஜய்”… உயில் தான் எழுதி வைப்பாங்க.. ஆனா நான் என் உயிரையே தளபதிக்கு எழுதி கொடுப்பேன்… சட்டப்பேரவையில் அமைச்சர் பர்வேஸ் உருக்கம்..!!

Published

on

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ், முதலமைச்சர் விஜய் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த எளிய குடும்பப் பின்னணி கொண்ட தன்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டமன்றத்தில் அமர வைத்த முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று அவர் உருக்கமாகக் கேள்வியெழுப்பியுள்ளார்.

அமைச்சர் தனது உரையில், மற்றவர்கள் பொதுவாக உயிலை மட்டுமே எழுதித் தருவார்கள் என்றும், ஆனால் தான் தளபதி விஜய்க்காகத் தனது உயிரையே எழுதித் தருவதாகவும் உணர்ச்சிப்பூர்வமாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனக்கு மாதா, பிதா, குரு மற்றும் தெய்வம் என எல்லாமே முதலமைச்சர் விஜய் அவர்கள்தான் என்று நெகிழ்ந்து பாராட்டியுள்ளார். நற்பணி மன்ற உறுப்பினராக இருந்து தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் உயர்ந்த தனது அரசியல் வளர்ச்சிக்கு விஜய்யே முழு காரணம் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in