LATEST NEWS
காலையிலேயே பரபரப்பு..! “அமமுக என்னிடம் தான் உள்ளது” பொதுக்குழுவை கூட்டி நிரூபிப்பேன்… பகீர் கிளப்பிய எம்.எல்.ஏ காமராஜ்..!!
அமமுக கட்சியிலிருந்து தாம் நீக்கப்பட்டதாக டி.டி.வி. தினகரன் கூறியதை மறுத்துள்ள எம்.எல்.ஏ காமராஜ், உண்மையான கட்சி தன்னிடம் மட்டுமே இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். விரைவில் கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டி இதனைத் தாம் நிரூபிக்கப் போவதாகவும் அவர் சவால் விடுத்துள்ளார். மேலும், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கு ஏற்பட்டது போன்ற அரசியல் சூழல்தான் இங்கும் நடக்கும் என்றும், அதனைச் சபாநாயகரே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மறுபுறம், கட்சித் தலைமைக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி எம்.எல்.ஏ காமராஜைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என அமமுக தரப்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகுதிநீக்க நடவடிக்கைக்கான முயற்சிகள் நடந்து வரும் சூழலில், காமராஜின் இந்த அதிரடிப் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்திலும், குறிப்பாக அமமுக தொண்டர்களிடையேயும் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
