ஒரு MLA இவ்வளவு அநாகரீகமா நடந்துக்குவதா..? சட்டப்பேரவையில் வாயில் காகிதத்தை வைத்து நனைத்து காதை சுத்தம் செய்த திமுக எம்எல்ஏ… கேமராவில் சிக்கிய காட்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஒரு MLA இவ்வளவு அநாகரீகமா நடந்துக்குவதா..? சட்டப்பேரவையில் வாயில் காகிதத்தை வைத்து நனைத்து காதை சுத்தம் செய்த திமுக எம்எல்ஏ… கேமராவில் சிக்கிய காட்சி..!!

Published

on

தமிழக சட்டப்பேரவையின் மானியக்கோரிக்கை விவாதத்தின் போது, திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் காகிதத்தை மடித்து காதை சுத்தம் செய்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் தீவிரமாக பதிலளித்துக் கொண்டிருந்த வேளையில், பின்வரிசையில் அமர்ந்திருந்த விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், கையில் இருந்த ஒரு பேப்பரைச் சுருட்டி, வாயில் வைத்து எச்சிலால் ஈரமாக்கி, அதனைத் தனது காதுக்குள் விட்டு சுத்தம் செய்யத் தொடங்கினார். அவையின் முக்கிய விவாதங்கள் மிகத் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், மக்கள் பிரதிநிதி ஒருவரின் இந்த அலட்சியமான செயல் அங்கிருந்த கேமராவில் பதிவானது.

சட்டமன்ற மரபுகளை மீறும் வகையில் அமைந்த இந்த விசித்திரமான செயல் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அவையின் மாண்பைக் கெடுக்கும் வகையில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட அந்த எம்எல்ஏவின் செயலைக் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மிக முக்கியமான மக்கள் பிரச்சினைகள் பேசப்படும் மிக உயர்ந்த இடத்தில், இத்தகைய அநாகரிகமான செயலில் ஈடுபட்டது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், அரசியல் வட்டாரத்திலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in