LATEST NEWS
“உங்களால ஒரே தொல்லையா போச்சே…!” இரு மனைவிகள் நடுரோட்டில் பயங்கர சண்டை: மன உளைச்சலால் மயங்கி விழுந்த எகிப்து கால்பந்து கோச்.. மருத்துவமனையில் அனுமதி..!!
எகிப்து தேசிய கால்பந்து அணியின் பயிற்சியாளரான ஹோசம் ஹசன், தனது இரண்டு மனைவிகளுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலைத் தடுக்க முயன்றபோது ஏற்பட்ட கடுமையான மன உளைச்சலால் மயங்கி விழுந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எகிப்தின் புகழ்பெற்ற வடக்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள மரினா எல் அலமீன் சொகுசு விடுதியின் உணவகம் ஒன்றில் தனது குடும்பத்தினருடன் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்தபோது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. ஹசனின் மூத்த மனைவி ஹொவைடா அல்-கர்பாவி மற்றும் இரண்டாவது மனைவி டினா முஸ்தபா ஆகிய இருவருக்கும் இடையே எதிர்பாராதவிதமாக வாக்குவாதம் ஏற்பட்டு, அது விபரீதமான கைகலப்பாக மாறியது.
பொதுமக்கள் முன்னிலையில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டும், தலைமுடியை இழுத்துக் கொண்டும் கடுமையான சண்டையில் ஈடுபட்டனர். இந்த மோதலின் போது, சூடான காபி ஊற்றப்பட்டு, சண்டையின் தீவிரம் கட்டுக்கடங்காமல் போனதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உறவினர்கள் மற்றும் விடுதிப் பாதுகாப்புப் படையினர் உடனடியாக தலையிட்டும் சண்டையை நிறுத்த முடியாததால், இறுதியில் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர். தனது இரு மனைவிகளும் பொது இடத்தில் மிக மோசமாகச் சண்டையிட்டுக் கொள்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்த 59 வயதான பயிற்சியாளர் ஹோசம் ஹசன், அவர்களைத் தடுக்க முயன்றபோது ஏற்பட்ட கடும் பதற்றத்தால் திடீரென மயக்கமடைந்தார்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, அவசர மருத்துவ சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சைக்குப் பின், தற்போது அவர் முழுமையாகக் குணமடைந்து நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் மற்றும் அவரது வழக்கறிஞர் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வெட்கக்கேடான பொது மோதலைத் தொடர்ந்து, பல தசாப்தங்களாகத் தன்னுடன் வாழ்ந்து வந்த மூத்த மனைவி ஹொவைடாவை ஹோசம் ஹசன் முறைப்படி விவாகரத்து செய்து, அதற்கான சட்டப்பூர்வ ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார்.
