செம..! அமைச்சர்களுக்கு ரூ.26 லட்சம்; எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.15 லட்சம்.. கார் வாங்கப் பறந்தது புதிய உத்தரவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

செம..! அமைச்சர்களுக்கு ரூ.26 லட்சம்; எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.15 லட்சம்.. கார் வாங்கப் பறந்தது புதிய உத்தரவு..!!

Published

on

தமிழகத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அரசு செலவில் கார் வாங்குவதற்கான விதிகளில் திருத்தம் செய்து, தமிழக அரசு புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய உத்தரவின்படி, அமைச்சர்கள் மற்றும் முக்கியப் பதவிகளில் இருப்பவர்கள் ரூ. 26 லட்சம் வரையிலும், இதர எம்.எல்.ஏக்கள் ரூ. 15 லட்சம் வரையிலும் அரசு செலவில் கார்களை வாங்கிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பொதுத்துறைச் செயலாளர் த.சு. சுந்தரவல்லி இந்த அதிகாரப்பூர்வ அரசாணையைப் பிறப்பித்துள்ளார்.

இந்த விதிகளின்படி, எம்.எல்.ஏக்கள் தங்களது பதவிக்காலம் முடிவடைந்ததும் காரை அரசிடம் திருப்பி ஒப்படைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒருவேளை பதவி நீக்கம், ராஜினாமா அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் தங்களது பதவிக்காலம் பாதியிலேயே முடிவுக்கு வந்தாலும், அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட காரை உடனடியாக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது இந்த புதிய அரசாணையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in