LATEST NEWS
“எம்.எல்.ஏ-னா இப்படித்தான் இருக்கணும்” விபத்தில் சிக்கி துடிதுடித்த இளைஞர்… சொந்த காரிலேயே ஏற்றி மருத்துவமனைக்கு விரைந்த தவெக முகுந்தன்.. குவியும் பாராட்டுக்கள்..!!
கிருஷ்ணகிரி அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய இளைஞரை, தவெக சட்டமன்ற உறுப்பினர் முகுந்தன் தனது சொந்த காரில் ஏற்றிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்த நெகிழ்ச்சியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. நெடுஞ்சாலையில் பயணித்த அந்த இளைஞர் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகி, ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்துள்ளார்.
அந்தச் சமயத்தில், அவ்வழியாகத் தனது காரில் வந்த தவெக எம்.எல்.ஏ. முகுந்தன், சாலையில் அடிபட்டுக் கிடந்த இளைஞரைப் பார்த்ததும் உடனடியாகத் தனது வாகனத்தை நிறுத்தினார். விபத்தின் தீவிரத்தை உணர்ந்து சற்று நேரமும் தாமதிக்காமல், காயமடைந்த இளைஞரைத் தனது காரிலேயே ஏற்றி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அதிவேகமாக விரைந்து சென்று அனுமதித்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை கிடைக்கச் செய்து, அவரது உயிர் பிழைக்கத் துரிதமாகச் செயல்பட்டார். விபத்து நேர்ந்த இக்கட்டான நேரத்தில் அரசியல் பாராமல், சக மனிதனின் உயிரைக் காப்பாற்ற களத்தில் இறங்கி உதவிய சட்டமன்ற உறுப்பினர் முகுந்தனின் இந்த மனிதநேயமிக்க செயலை அங்கிருந்த பொதுமக்களும் மருத்துவமனை ஊழியர்களும் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.
