LATEST NEWS
“உயிரோட விளையாடுறீங்களா?”.. டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த மிகப்பெரிய சதி.. இணையத்தில் ஆதாரத்தை இறக்கி டெல்லி போலீஸை கதறவிட்ட CJP தலைவர்.. சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ..!!
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தின் போது, போராட்டக்காரர்களைக் கலைக்க டெல்லி காவல்துறை காலாவதியான கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியதாகச் சமூக ஊடகங்களில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. போராட்டக் களத்தில் கண்டெடுக்கப்பட்ட கண்ணீர்ப்புகைக் குண்டின் எச்சம் தொடர்பான ஸ்கிரீன்ஷாட்டை சிஜேபி தலைவர் அஷுதோஷ் ரங்கா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்ததைத் தொடர்ந்து இந்த விவாதம் தீவிரமடைந்தது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள குறியீடுகளின்படி, அந்தப் புகைக்குண்டு டிசம்பர் 2022-ல் தயாரிக்கப்பட்டு டிசம்பர் 2025-ல் காலாவதியாகும் தேதியைக் கொண்டிருந்ததாகப் பயனர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Oh wow, Delhi Police really outdid themselves — firing vintage tear gas shells that expired in Dec 2025. Because fresh equipment is for amateurs, right? Nothing builds trust like expired riot gear on protesters. #DelhiProtests #NEETScam #ExpiredTearGas #JantarMantar— CuriousMindX63 (@PhDStudent63) July 20, 2026
இந்த குற்றச்சாட்டு வைரலானதைத் தொடர்ந்து, இணையத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று டெல்லி காவல்துறைக்கு எதிராகப் பெரும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்களிடம் காலாவதியான, பாதுகாப்பற்ற உபகரணங்களைப் பயன்படுத்தியது மக்களின் உயிரோடு விளையாடும் செயல் என்று சமூக ஊடகப் பயனர்கள் மிகக் காரசாரமாக விமர்சித்து வருகின்றனர். இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தக் காவல் துறையோ அல்லது அதிகாரிகளோ இதுவரை எவ்வித விளக்கமும் அல்லது உறுதிப்படுத்தலும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
