“நான் வாயைத் திறந்தா காத்துதான் வருது…” மேடையில் முழங்கிய குரலுக்கு என்ன ஆச்சு?.. ராஜஸ்ரீ ஜெய்சன் வெளியிட்ட நெஞ்சை பிழியும் வீடியோ…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நான் வாயைத் திறந்தா காத்துதான் வருது…” மேடையில் முழங்கிய குரலுக்கு என்ன ஆச்சு?.. ராஜஸ்ரீ ஜெய்சன் வெளியிட்ட நெஞ்சை பிழியும் வீடியோ…!!

Published

on

தன்னுடைய கம்பீரமான குரலாலும், நேர்மறையான எண்ணங்களாலும் மேடைகள் தோறும் மனித மனங்களில் நம்பிக்கையை விதைத்தவர் பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் ராஜஸ்ரீ ஜெய்சன். கடந்த ஐந்து ஆண்டுகளாக நான்காம் நிலை புற்றுநோயின் கொடிய வலியோடு போராடி வந்தபோதிலும், அதைச் சிறிதும் வெளியில் காட்டிக் கொள்ளாமல், மேடைகளில் எப்போதுமே புன்னகையோடும் உற்சாகத்தோடும் வலம் வந்தவர் அவர். ஆனால், அண்மையில் அவர் வெளியிட்ட காணொளி ஒன்று பார்ப்போர் நெஞ்சைப் பதற வைத்துள்ளது. புற்றுநோயின் தீவிர சிகிச்சைகளால் தற்போது அவர் தனது பேசும் திறனை இழக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார். நான் இப்போது பேச முயற்சித்தால், என் தொண்டையிலிருந்து வார்த்தைகளுக்குப் பதிலாகக் காற்று மட்டுமே வெளிவருகிறது.

https://www.instagram.com/reel/DazD1zvoqab/?utm_source=ig_embed&ig_rid=A8Sp2s9NG_YyDAFV7remmeK

Advertisement

அதனை தொடர்ந்து அம்மா, எப்போது மீண்டும் பழையபடி உரக்கப் பேசுவீர்கள்? என்று என் குழந்தைகள் கேட்கும்போது, என் நெஞ்சமே பிளப்பது போல் இருக்கிறது என்று அவர் கண்ணீருடன் கூறியுள்ளது, அவருடைய ரசிகர்களையும் இணையவாசிகளையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை தன் வலியை மறைத்து வாழ்ந்ததாகவும், இனி அதை மனதில் பூட்டி வைக்க முடியாத சூழலிலேயே இந்த வீடியோவை வெளியிடுவதாகவும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், நடிகைகள் அனிதா சம்பத், ரேகா உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்களும், ஆயிரக்கணக்கான ரசிகர்களும் அவருக்கு ஆறுதல் கூறி, அவர் விரைவிலேயே பூரண குணமடைந்து மீண்டும் பழைய குரலில் பேச வேண்டும் என்று பிரார்த்தனைகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in