CRIME
“அடப்பாவிகளா..! ஏழை மூதாட்டியின் ஆதார், பான் கார்டு வைத்து ரூ.2.50 கோடி ஜிஎஸ்டி மோசடி..” யார் அந்த மர்ம நபர்கள்..? நெஞ்சை நடுங்க வைக்கும் பரபரப்பு பின்னணி..!!
ஆதார், பான் கார்டு ஆவணங்கள் மூலம் ஏழை மூதாட்டியின் பெயரில் போலி நிறுவனம் தொடங்கி ரூ.2.53 கோடி ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ள அதிர்ச்சியூட்டும் கார்ப்பரேட் மோசடி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அம்பலமாகியுள்ளது. கூலித் தொழில் செய்து வரும் ராமகிருஷ்ணன் மற்றும் அவரது தாயார் லட்சுமி (71) ஆகியோரது தனிப்பட்ட வங்கிச் சேமிப்புக் கணக்குகள், அவர்கள் சம்பந்தப்படாத ஒரு தனியார் நிறுவனத்தின் ரூ.2,53,23,676 வரி நிலுவைக்காக வணிக வரித்துறையினரால் அதிரடியாக முடக்கப்பட்டுள்ளன. தங்களது ஆவணங்களை யாரோ மர்ம நபர்கள் திருடிப் போலியாக ஜி.எஸ்.டி. கணக்கு தொடங்கி இந்த இமாலய வரி ஏய்ப்பை நடத்தியுள்ளனர் என்பதைத் தாமதமாக மூதாட்டி லட்சுமி அறிந்தார்.
வணிக வரித்துறை குறிப்பிட்டுள்ள அந்தத் தனியார் நிறுவனத்திற்கும், தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறி அதிர்ச்சியடைந்த மூதாட்டி லட்சுமி, நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அதிரடியாகப் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். தனது மகனின் வங்கி கணக்கும் முடக்கப்பட்டுள்ளதால், இந்த ஆவணத் திருட்டு மற்றும் ஜி.எஸ்.டி. மோசடி குறித்து உரிய விசாரணை நடத்தித் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களது வங்கி கணக்குகளை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றும் அவர் கண்ணீருடன் கோரியுள்ளார். ஏழை மூதாட்டியின் ஆவணங்களை வைத்து ரூ.2.53 கோடி அளவிற்கு ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ள இந்தத் துணிகரச் சம்பவம் தமிழக அளவில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
