“விடுதிக்கு அடிக்கடி வந்து பழகிய பாசக்கார 41 வயது மாமா..” 17 வயது மாணவிக்கு நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் வயிற்று வலி… அதிர்ந்துபோன மருத்துவர்கள்… ஆசைவார்த்தை கூறி அக்கா பேத்திக்கே துரோகம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“விடுதிக்கு அடிக்கடி வந்து பழகிய பாசக்கார 41 வயது மாமா..” 17 வயது மாணவிக்கு நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் வயிற்று வலி… அதிர்ந்துபோன மருத்துவர்கள்… ஆசைவார்த்தை கூறி அக்கா பேத்திக்கே துரோகம்..!!

Published

on

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே விடுதியில் தங்கிப் படித்து வந்த 17 வயது கல்லூரி மாணவியை அவரது உறவினரே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் பேரண்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 41 வயது லாரி ஓட்டுநரான கோவிந்தராஜ் என்பவர், விடுதியில் இருந்த தனது அக்கா பேத்தியான அந்த மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி அடிக்கடி வெளியில் அழைத்துச் சென்றுள்ளார். கடந்த ஜனவரி மாதம் மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது, கோவிந்தராஜ் அவரை கட்டாயப்படுத்திப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக அந்த மாணவி கர்ப்பமடைந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 21 அன்று இரவு அவருக்குத் திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. பதறிய பெற்றோர்கள் அவரை ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, பரிசோதனையில் மாணவி 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அங்கு அவருக்குக் குறைப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்து சிறிது நேரத்திலேயே உயிரிழந்தது.

Advertisement

இச்சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில், ஓசூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் விரைந்து வந்து பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது உறவினரான கோவிந்தராஜின் துரோகத்தை வெளிப்படுத்தினார். அதன் அடிப்படையில், குற்றவாளியான லாரி ஓட்டுநர் கோவிந்தராஜை போக்சோ உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in