CRIME
“ஐயோ கடவுளே..! முதுகில் குத்திய இரும்பு கம்பி வாய் வழியே வந்த கொடூரம்..!” விளையாடிய போது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்… நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
குஜராத் மாநிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாகத் தவறி கீழே விழுந்த நசிஷ் என்ற சிறுவனின் முதுகில் குத்திய இரும்பு கம்பி, அவனது வாய் வழியே வெளியே வந்த அதிர்ச்சியூட்டும் விபரீதச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சற்றும் எதிர்பாராத இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த அந்தச் சிறுவனை அக்கம் பக்கத்தினர் மற்றும் பெற்றோர் உடனடியாக மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அவசரமாக அனுமதித்தனர்.
மருத்துவமனையில் தீவிரப் போராட்டத்திற்குப் பின், சிறுவனின் உடலில் குத்தியிருந்த இரும்பு கம்பி வெற்றிகரமாக அகற்றப்பட்டு, நல்வாய்ப்பாக அவன் மயிர்இழையில் உயிர் தப்பியுள்ளான். இந்த அதிர்ச்சியூட்டும் விபத்தில் சிறுவன் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தது ஒரு பெரும் அதிசயமாகப் பார்க்கப்படும் நிலையில், தற்போது அவன் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டு மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறான்.
