ஐயோ கொடுமையே..! ஆசையா போன இடத்துல இப்படியா நடக்கணும்…? 2 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம்.. சமாதானம் பேசி அழைத்த பெற்றோர்.. ஊர் திரும்பும் வழியில் பலியான புதுப்பெண்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஐயோ கொடுமையே..! ஆசையா போன இடத்துல இப்படியா நடக்கணும்…? 2 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம்.. சமாதானம் பேசி அழைத்த பெற்றோர்.. ஊர் திரும்பும் வழியில் பலியான புதுப்பெண்..!!

Published

on

கிருஷ்ணகிரி மாவட்டம் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவரும் சத்யா என்பவரும் தீவிரமாகக் காதலித்து வந்த நிலையில், இருவீட்டுப் பெற்றோரின் கடுமையான எதிர்ப்பையும் மீறி 2 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்குப் பிறகு பெற்றோருக்குப் பயந்து, இருவரும் சென்னையில் குடியேறித் தங்களது புதிய வாழ்க்கையைத் தொடங்கி வசித்து வந்தனர்.

இந்நிலையில், சென்னையில் வசித்து வந்த காதல் தம்பதியைத் தொடர்புகொண்ட பெற்றோர், கடந்த காலக் கசப்புகளை மறந்து சமரசமாகப் போவதாகவும் வீட்டிற்குத் திரும்புமாறும் அழைத்துள்ளனர். பெற்றோர் தங்களை ஏற்றுக்கொண்டதாகக் கருதி மகிழ்ச்சியடைந்த நவீனும் சத்யாவும், நேற்று அதிகாலை வேளையில் காரில் சென்னையிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

Advertisement

இவர்களது கார் ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அருகே சென்னசமுத்திரம் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கனரக லாரியின் பின்புறம் மோதி கொடூரமாக விபத்துக்குள்ளானது. இதில் சத்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்; நவீன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் சத்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதோடு, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in