“அய்யோ கடவுளே..! ரூமுக்குள் இருந்த 16 பிஞ்சுகள்…” அரசு மருத்துவமனையில் ஏசி கம்ப்ரெசர் வெடித்த அடுத்த நொடியே சாம்பலான வார்டு.. நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அய்யோ கடவுளே..! ரூமுக்குள் இருந்த 16 பிஞ்சுகள்…” அரசு மருத்துவமனையில் ஏசி கம்ப்ரெசர் வெடித்த அடுத்த நொடியே சாம்பலான வார்டு.. நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்..!!

Published

on

இஸ்லாமாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் மகளிர் மருத்துவப் பிரிவு குழந்தைகள் பராமரிப்பு அறையில், ஏசி இயந்திரத்தின் கம்ப்ரெசர் திடீரென வெடித்து ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. விபத்து நடந்த சமயத்தில் அந்தப் பராமரிப்பு அறையில் மொத்தம் 16 பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில், ஏசி வெடித்த அதிர்ச்சியில் அறை முழுவதும் கரும்புகை சூழ்ந்து தீ அசுர வேகத்தில் பரவியதால் பிஞ்சு குழந்தைகள் அனைவரும் உள்ளேயே சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், குழந்தைகள் இருந்த அறை மருத்துவமனையின் 3-வது மாடியில் அமைந்திருந்ததால் மீட்புப் பணியில் கடுமையான சவால்களை எதிர்கொண்டனர். இறுதியாக ஜன்னல் கண்ணாடிகளை அதிரடியாக உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த வீரர்கள், படுகாயங்களுடன் போராடிய ஒரே ஒரு பச்சிளம் குழந்தையை மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்ட நிலையில், எஞ்சிய 15 குழந்தைகளும் தீயின் கொடூரப் பிடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே கருகி பலியாயினர். ஒட்டுமொத்தப் பாகிஸ்தானையும் உலுக்கியுள்ள இந்த கோர விபத்து குறித்து உயர்மட்ட அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in