LATEST NEWS
“வேறு இனமானால் என்ன..? தாய்மை ஒன்றுதான்..!” பசியால் வாடிய குட்டிப் பன்றிக்கு நேர்ந்த அற்புதம்.. நெட்டிசன்களை நெகிழ வைக்கும் வீடியோ..!!
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் வெல்துர்த்தி காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள பிரதான சாலையில், பசியால் வாடிய குட்டிப் பன்றி ஒன்று பசு மாட்டிடம் சென்று பால் குடித்துத் தனது பசியைத் தீர்த்துக் கொண்ட உறைந்துபோக வைக்கும் விசித்திரமான அரிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இயற்கையின் விதிகளையே தலைகீழாக மாற்றிய இந்த நெஞ்சை உருக்கும் காட்சியில், அந்தப் பசு மாடும் எவ்வித எதிர்ப்பும் காட்டாமல், அந்தப் பன்றிக் குட்டியைத் தனது சொந்தக் கன்றுக்குட்டியாகவே நினைத்துப் பாசத்துடன் பால் குடிக்க அனுமதித்துள்ளது.
కర్నూలు జిల్లా వెల్దుర్తిలో ఒక అరుదైన, వింత ఘటన చోటుచేసుకుంది..
ఆకలితో ఉన్న ఒక పంది పిల్ల నేరుగా ఒక గోమాత వద్దకు చేరి పాలు తాగుతూ తన ఆకలిని తీర్చుకుంది..
ఆ పంది పిళ్లను తన సొంత దూడలా భావించిన ఆ గోవు ఎలాంటి అభ్యంతరం చెప్పకుండా పాలు తాగనిచ్చింది..
వెల్దుర్తి పోలీస్స్టేషన్… pic.twitter.com/Z5n9oNNjJP— RTV (@RTVnewsnetwork) August 26, 2026
விலங்கினங்களுக்குள் இருக்கும் பாசப் பிணைப்பை வெளிப்படுத்திய இந்த அபூர்வக் காட்சி, வெல்துர்த்தி காவல் நிலையத்தின் முன் சென்ற பொதுமக்களையும் அப்பகுதி உள்ளூர் மக்களையும் காந்தம் போல ஈர்த்து வியப்பில் ஆழ்த்தியது. பொதுவாக வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த விலங்குகள் ஒன்றையொன்று வெறுக்கும் சூழலில், ஒரு தாய் பசு பன்றிக் குட்டிக்குத் தாய்ப்பால் ஊட்டிய இந்த உன்னதமான மனிதநேயக் காட்சி தற்போது சோசியல் மீடியா எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் காட்டுத்தீயாய் பரவி, நெட்டிசன்களின் இதயங்களைக் கொள்ளையடித்து வருகிறது.
