CRIME
“உனக்கு வயதாகிவிட்டது” என கள்ளத்தொடர்பை முறிக்க முயன்ற தூய்மைப் பணியாளர்.. ஆசைவார்த்தை கூறி 12 ஆண்டு பழகிய முதியவர் செய்த கொடூரம்… தூங்கும்போது சுத்தியலால் அடித்துக் கொலை..!!
திருவள்ளூர் மாவட்டம் கரலப்பாக்கத்தைச் சேர்ந்த 45 வயதான தூய்மைப் பணியாளர் லதா என்பவர், பூட்டிய ஒரு வீட்டிற்குள் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து முத்தாபுதுப்பேட்டை போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், லதாவுடன் கடந்த 12 ஆண்டுகளாகப் பழகி வந்த 65 வயதான முனிவேல் என்பவரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
வயது முதிர்வு காரணமாக முனிவேலுடனான கள்ளத் தொடர்பை முறித்துக் கொள்வதாக லதா கூறியுள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த முனிவேல், லதா தூங்கிக் கொண்டிருந்தபோது சுத்தியலால் அவரது தலையில் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர் வீட்டை வெளியே பூட்டிவிட்டு தப்பியோடியதை அவர் ஒப்புக்கொண்டதாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
