LATEST NEWS
நெஞ்சை உலுக்கும் சோகம்..! பஜ்ஜி சாப்பிட்ட சில நிமிடங்களில் வாந்தி, மயக்கம்.. சிகிச்சை பலனின்றி காவலரின் மகள் பரிதாப பலி..!!
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில், கடையில் பஜ்ஜி வாங்கிச் சாப்பிட்ட 9 வயது சிறுமி ஒருவர் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த சிறுமி ஸ்ரீத்திகா (9), லச்சுவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மகள் ஆவார். செந்தில்குமார் செங்குன்றம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறார். கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி, செந்தில்குமார் தனது மகளுடன் தண்டலம் பஜார் வீதிக்குச் சென்றபோது அங்குள்ள ஒரு கடையில் சிறுமிக்கு பஜ்ஜி வாங்கித் தந்துள்ளார்.
பஜ்ஜியைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுமி ஸ்ரீத்திகாவுக்குத் திடீரென கடுமையான வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை, மகளை உடனடியாக மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்குச் சிறுமி கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சனிக்கிழமை இரவு அந்தச் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து பெரியபாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியின் உடற்கூறாய்வு (Post-mortem) அறிக்கை முழுமையாகக் கிடைத்த பிறகே, அவரது மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பது தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவலரின் மகளுக்கு நேர்ந்த இந்தத் துயரம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
